கன்னியர் நெஞ்சில் உயிரோட்டமாய் இருந்து, அதிரடி சாகச விளம்பரங்களில் தன்னை ராஜாவாய் காட்சிப்படுத்திக் கொண்டவர் ஆர்யா. மிதிவண்டி ஒட்டுதலை சில வருடங்களாகவே தீவிரமாய் மேற்கொண்டு வந்த ஆர்யா. தற்போது தனது தீரா பயிற்சி தந்துள்ள உத்வேகம் மற்றும் நம்பிக்கையின் விளைவாய் சர்வதேச பந்தயங்களில் பங்கேற்க உள்ளார். அதன் முதற்படியாக தனது சர்வதேச மிதிவண்டி பந்தய அணி ‘ரைடர்ஸ்’ லோகோவை வெளியிட்டுள்ளார்.
தனது முதல் சர்வேதேச போட்டியினைப் பற்றி குறிப்பிடுகையில் ஆடவரும் காதல் கொள்ளும் ஆர்யா கூறுகையில் “வாடேர்ன்ருன்டன் ரேஸ் என்ற பெயரில் ஸ்வீடன் நாட்டில் மோட்டாலா என்ற ஊரில் நடந்து வருகிறது இப்பந்தயம். தொடர்ந்து 50 வது வருடமாக இந்த போட்டிநடக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது. அபாயகரமான வளைவுகள், ஏரிகள்,குளங்கள் மலைகள் சீரற்ற எதிர்காற்று என பல்வேறு சவால்களை கடந்து 300 கிலோமீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாகவேண்டும். இதற்காக கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்” என தனக்கே உரிய தன்னம்பிக்கையுடன் கூடிய சிரிப்பை வெளிபடுத்தியாவாரே ‘பயிற்சியை தொடர்ந்தார் ஆர்யா