.
.

.

Latest Update

சர்வர் சுந்தரம் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்கும் மாராத்தி நடிகை..


Vaibhavi Shandilyaதமிழ் படங்களுக்கு மராத்தி சினிமா நிறையவே திறமைகளை தந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும்,அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் படும் ரஜினிகாந்த்தை தொடர்ந்து இப்பொழுது மராத்தி theatre மூலம் அறிமுகமாகி , தமிழ் திரை உலகில் கால் பதிக்க வருகிறார் புது முக நாயகி வைபவி ஷண்டிலியா. கெனன்யா films தயாரிப்பில் புதிய இயக்குனர் பால்கி இயக்கும் சர்வர் சுந்தரம் படத்தின் நாயகியாக வைபவி ஷண்டியலா நடிக்கிறார்.

‘ வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம்.மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதா நாயகி தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம்.அவர் பரதத்திலும், கதக் நடனத்திலும் தேர்ந்தவர். , அழகும் திறமையும் ஒருங்கிணைந்து இருக்கும் பதுமையான வைபவி ஷண்டிலியா தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவர்வார்’ என்று தெரிவித்தார் இயக்குனர் பால்கி.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles