ஷாலோம் ஸ்டுடியோஸ் & இயக்குனர் பிரபு சாலமன் தயாரிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘சாட்டை’ படத்தை இயக்கிய இயக்குனர் அன்பழகன் எம்.மாலா Msc,B.Ed, TTC.,D.C.A. என்ற பட்டதாரி பெண்ணை திருமணம் செய்கிறார். இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் வருகிற (31 – 08 – 2014 ) ஞாயிற்றுக்கிழமை அன்று அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகில் உள்ள செந்துறையில் நடைபெற உள்ளது.திருமண விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.