“சாயி பாபா இன்னமும் வாழ்கிறார்”
மனிதகுலத்திற்கு, எண்ணற்ற அற்புத நிகழ்வுகளின் வாயிலாக மன அமைதியும், மகிழ்ச்சியும் தந்து, பக்தர்களின் நம்பிக்கை மற்றும் பக்தியின் மூலம்நம்மிடயே இன்றும் நிதர்சனமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் ஷீரடி சாயி பாபா. தில்லி நகரத்தை சேர்ந்த எழுத்தாளரும், ரேக்கி குருவுமான திருமதி ஜெயா வாஹி, ஷீரடி சாயி பாபாவை பின்பற்றுபவரும், அவரது பூரண அருள் பெற்ற பக்தரும் ஆவார். இவர் சாயி பாபாவின் பொன்மொழிகளையும்,வியக்கத்தக்க வாழ்க்கை நிகழ்வுகளையும் தொகுத்து “சாயி பாபா இஸ் ஸ்டில் அலைவ்” என்ற ஆங்கில புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இப்புத்தகம், படித்த அனைத்து பக்தர்களுக்கும், மெய்சிலிர்க்கவைக்கும் அனுபவத்தையும், பேரானந்ததையும் அளித்தது. வடமாநிலங்களில்மட்டுமின்றி தெண்மாநிலங்களிலும் இப்புத்தகம் பக்தர்களின் மனதை ஈர்க்கத்தொடங்கியது. அப்படி ஈர்த்த பக்தர்களுள் ஒருவர்தான் புகழ்பெற்ற எழுத்தாளரான திருமதி சிவசங்கரி அவர்கள். இவர், இப்புத்தகத்தின் வாயிலாக தான் அனுபவித்த உணர்வுகள், சொல்லில் அடங்காது என்று குறிப்பிடுகிறார். சாயி பாபாவின் தூண்டுதலால், தான் பெற்ற இந்த அனுபவத்தை தமிழ் வாசகர்களுக்கு அளிக்க எண்ணினார். சாயி பாபாவும் இந்த பேராவலை, திருமதி ஜெயா வாஹி மூலமாக நிறைவேற்றி வைத்தார். இதோ நம்மிடயே இன்று “சாயி பாபா இன்னமும் வாழ்கிறார்” என்ற புத்தகம்ஆங்கிலத்திலிரிந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இணயததளங்களிலும் பல்வேறு இடங்களிலும் கிடைக்கப்பெறுகிறது.
இப்புத்தக வெளியீட்டு விழா ஜனவரி 23 ஆம் தேதி, கோடம்பாக்கம் வாத்தியர் தோட்டம் முதல் தெருவிலுள்ள “ஷீரடி சாயி தியான மண்டபம்” என்றகோயிலில் நடைபெற்றது. ஆறாம் ஆண்டு தொடக்கத்திலுள்ள இத்தளத்திற்கு, கோடம்பாக்கத்தை சேர்ந்த இசை அமைப்பாளர் குரு கல்யாணின் அழைப்பை ஏற்று, திருமதி ஜெயா வாஹி நேரில் விஜயம் செய்து, சாயி பாபாவின் முன்னிலைலும், கோயில் நிறுவனர்கள் smt. சகுந்தலா அம்மாள் குடும்பத்தார் மற்றும் பக்தர்கள்முன்னிலைலும் இப்புத்தகத்தை வெளியிட்டார். இவ்விழாவிற்க்கு பிரபல பாடலாசிரியர் திரு.பழனி பாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இது பற்றி ஆசிரியர் திருமதி ஜெயா வாஹி கூறியதாவது, “இந்த கோயில் சாயி பாபாவின் தெய்வீக அதிர்வுகள் நிறைந்த கோயிலாக என்னால் முற்றிலும் உணரமுடிகிறது. பாபா இங்கு சுவாசிப்பதையும், வாழ்வதையும் என்னால் உணரமுடிகிறது. இங்கே பாபாவிடமிருந்து கிடைத்தற்கரிய ஆசிர்வாதங்களை எனது புத்தகத்திற்கு (“சாயி பாபா இஸ் ஸ்டில் அலைவ்”) பெற்றேன். இங்கே பாபாவின் ஆசிர்வாதத்தாலும் அழைப்பாலும் கூடியிருந்த என் அரவணைப்பிற்குரிய குரு கல்யாண், கோயில் நிர்வாகிகள் மற்றும் அனைத்து பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. பாபா அனைவரையும் ஆசிர்வதிப்பார்.”
இந்நிகழ்வு பற்றி கோயில் நிறுவனர் smt. சகுந்தலா அம்மாள் குடும்பத்தார் கூறியதாவது, “இத்திருக்கோயில் வழியாக ஷீரடி சாயி பாபா பக்தர்களுக்கு பல நன்மைகள் அளித்து வருவது எங்களுக்கு மனநிறைவை அளிக்கிறது. ஷீரடி சாயி பாபாவின் அருளாசியுடன் இத்தளம் ஆறாம் ஆண்டினை எட்டியுள்ள நிலையில், அம்மையார் திரு ஜெயா வாஹி முன்னிலையில் “சாயி பாபா இன்னமும் வாழ்கிறார்” என்ற புத்தக வெளியீடு நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.”
முன்னதாக இப்புத்தகம் சென்னையிலுள்ள, மயிலாப்பூர் மற்றும் ஷெனாய் நகர் ஷீரடி சாயி பாபா கோயில்களிலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் AVM நிறுவனத்தை சேர்ந்த AVM சரவணன் அவர்கள் மற்றும் சென்னை உயர் நீதி மன்றத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றநீதிபதி திரு. S. ராஜேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர். இப்புத்தகம் ஒரு Times of India வெளியீடு.
இதன் தொடர்ச்சியாக திருமதி ஜெயா வாஹி இசை அமைப்பாளர் குரு கல்யாணின் ஸ்டூடியோவிற்கு வருகை தந்தார். அங்கு, திருமதி ஜெயா வாஹி எழுதி குரு கல்யாண் இசை அமைத்த சாயி பாபாவை பற்றிய “வோ ருஹாணி எஹ்ஸாஸ்” என்ற ஹிந்தி பாடலை கேட்டு ரசித்தார்.