வில்அம்பு படத்தில் வெற்றியை கண்ட கதாநாயகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண்க்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளித்துள்ளது..
வில்அம்பு படத்தில் நான் நடித்த அருள் என்ற கதாபாத்திரம் தற்ச்செயலாக என் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையதாக அமைந்துவிட்டது. இன்ஜினியர் ஆக வேண்டும் என்று என் அப்பா “IT” சேர்த்தார் . ஆனால் எனக்கு பிடித்தது சினிமா என்பதால் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு visual communication தபால் முறை கல்வி மூலம் பயின்றேன் . வில் அம்பு கதாபாத்திரம் இப்படியே என் வாழ்க்கையுடன் தொடர்புடையதாகி விட்டது மட்டுமல்லாமல் என் அப்பா படத்திலும் கூட எனக்கு தந்தையாக நடிக்க நிகழ்ந்தது என்பது இன்னொரு மகிழ்ச்சியாக அமைந்தது
அரிது அரிது, சிந்து சமவெளி, பொறியாளன் ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவதாக நடித்த வில் அம்பு வெற்றியடைந்து பெரிய அளவில் பேசப்படுகிறது என்பது மிக மகிழ்ச்சி அளிப்பதுடன் இந்த வெற்றி எனக்கு பொறுப்புகள் அதிகமாகியுள்ளது என்பதையும் உணர்த்துகிறது. அதனாலேயே இனி வரும் படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது . எனக்கு சிங்கிள் ஹீரோவாக கதாபாத்திரம் அமைந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதே விருப்பம் . ஆக்க்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என்ற எல்லா அம்சங்களும் பொருந்திய வேடங்கள் கிடைத்தால் மிக மகிழ்ச்சி. வில் அம்பு படத்தை பார்த்த திரை உலகநண்பர்களும் ரசிகர்களும் எனக்கு அளித்து வரும் ஊக்கத்திற்க்கு நான் என்றும் கடமை பட்டுள்ளேன். என் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை இது காட்டுகிறது .நிச்சியம் அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக திரையுலகில் தொடர்வேன்