.
.

.

Latest Update

சினிமா இயக்குநர் பற்றிய கதை : ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்!


சினிமாவில் இருப்பவர்கள் தினந்தோறும் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும்; புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இயங்கிக் கொண்டேஇருக்க வேண்டும்; தன்னை நிரூபித்துக்கொண்டேஇருக்க வேண்டும்.இல்லாவிடில் சினிமாவை விட்டு விலகிப் போன உணர்வு வந்து விடும்.

இதை உணர்ந்திருக்கும் ஒருவர்தான் ஸ்ரீராம் பத்மநாபன். இவர் ‘டூ’ படத்தின் இயக்குநர். ‘மாப்பிள்ளை விநாயகர்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். அது சற்றே தாமதமாகவே சோம்பியிருக்கவில்லை.வெறுமனே ஒய்வெடுக்க விரும்பாத இவர்,இடையில் ‘பூனையின் மீசை என்கிற சிறுகதை தொகுப்பு வெளியிட்டார்.

‘465’என்கிற படத்திற்கு வசனம் எழுதுகிறார்.கிடைத்த இடை வெளியில் இப்போது ஒரு குறும்படமும் இயக்கி இருக்கிறார். படத்தின் பெயர் ‘ருசிகண்ட பூனை’ பத்து நிமிடம் கொண்டது.

இதில் ‘டூ’ படத்தின் நாயகன் சஞ்சய், ‘சரவணன் மீனாட்சி’ புகழ் பவித்ரா நடித்துள்ளனர்.

இது ஒரு த்ரில்லர் குறும்படம். இது சினிமா இயக்குநர் ஒருவர் பற்றிய கதை.சினிமா எப்படி ஒருவரை அதிலிருந்து வெளிவர முடியாமல் ஈர்க்கிறது என்பதை நகைச்சுவை காதல், திகில் கலந்து சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீராம்பத்ம நாபன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் .ஒளிப்பதிவு– எஸ்.பிரபு. எடிட்டிங்- விதுஜீவா, இசை – ஷாஜகான். இயக்குநர் உள்பட அனைவரும் திரைப்படக் கல்லூரி மாணவர்களே.

தன் , டூ ரீல் சினிமாஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன் தயாரித்துள்ளார்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன், ஒளிப்பதிவாளர் பிரேம். நடிகர் பகவதி ஆகியோர் நேற்று வெளியிட்ட,’ருசிகண்ட பூனை’ குறும்படம் , இன்று யூடியூபில் வெளியாகிறது.

சினிமாவில் பாதை வரவில்லை, வாய்ப்பு வரவில்லை என்பவர்கள் அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீராம் பத்மநாபனிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles