நடிகர் அர்ஜுன் நடிகராக ஜெயித்ததோடு மட்டுமல்லாமல் இயக்குநராகவும் ஜெயித்திருக்கிறார்.
அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் சமுதாயத்துக்கு தேவயான கருத்துகளே மையமா இருக்கும். அனைத்து தரப்பினருக்கும் எளிமையாக புரியும் வகையில் அவரது படங்களும் இருக்கும்.
கடந்த வருடம் அவர் நடித்து இயக்கிய ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் வெளியானது. இந்தப் படம் அபிமன்யூ என்ற பெரியரில் கன்னடத்திலும் வெளியானது. குழந்தைகளின் கல்வியும் அதன் முக்கியதுவத்தை குறித்து பேசியிருந்தது “ஜெய்ஹிந்த் 2”. தமிழிலும் கன்னடத்திலும் இந்தப் படம் அர்ஜுனுக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்ததோடு பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியையும் பெற்றது.
தற்போது கர்நாடக மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த படத்துக்கான இரண்டாவது பரிசை அபிமன்யூ வென்றுள்ளது. இப்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்திருந்த அர்ஜுன் இந்த விருதினைப் பெற இருக்கிறார்.