.
.

.

Latest Update

சிறிய பட்ஜெட் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம்…


IMG_4978லைகா நிறுவனம் ஹிந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து தயாரிக்கும் ஜெகன் இயக்கும் “ இக்கா “ என்ற படத்தையும் தயாரிக்கிறது.

தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க ராம் சரண் தேஜ் உடன் இணைந்து கத்தி படத்தின் ரீமேக்கையும் தயாரிக்க உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் மாபெரும் வெற்றி படமான கத்தியை தொடர்ந்து இந்திய துணை கண்டத்தின் இரு பெரும் சிகரங்களை ஒருங்கிணைத்து இமாலய முயற்சியாக பெரும் பொருட் செலவில் 2.O ( 2.ஒ) என்கிற படத்தை தயாரிக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாயகி எமிஜாக்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

பெரும் பட்ஜெட் படங்களையே லைகா நிறுவனம் தயாரிப்பதாக சொல்லி வருவதை பொய்பிக்கும் வகையில் கதைக்கு முக்கியத்துவம் அளித்து ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்க சாம் ஆண்டன் இயக்கத்தில் சிறிய பட்ஜெட் படத்தையும் தயாரிக்கிறது.

இத்தருணத்தில் தமிழக மக்களின் பெரும் துயரத்தில் லைக்கா நிறுவனமும் பங்கெடுக்கும் வகையில் இன்று மாலை தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் திரு. சண்முகம் அவர்களை லைகா நிறுவனத் தலைவர் திரு. சுபாஷ் கரன் அவர்கள் சந்தித்து ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார் .

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles