வெற்றியின் பூரிப்பில் நடிகர் சக்தி வாசு
சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் தொட்டால் பூ மலரும் படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் சக்தி வாசு.
தனது ஜனரஞ்சகமான நடிப்பாலும், நடனம் சண்டைபயிற்சி என அனைத்து துறைகளிலும் தனித்துவமாக விளங்கியதாலும் சக்தி வாசு தனக்கென்று மக்களின் மனதில் இடத்தை தக்கவைத்து கொண்டார்.
சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமாருடன் இவர் இணைந்து நடித்த சிவலிங்கா திரைப்படம் பல திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஒடுகின்றது. தமிழை அடுத்து கன்னடத்திலும் தனது தனிதிறமையால் ஒரு கதாநாயகனாக உருவானதை நினைத்து சந்தோஷப்பூரிப்பில் இருக்கிறார் சக்தி வாசு. சிவலிங்காவின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அப்படத்தை விரைவில் தமிழில் அனைத்து ரசிகர்களும் ரசிப்பத்ற்கு ஏற்றவாறு ஜனரஞ்சகமான முறையில் எடுக்கவுள்ளனர். சிவலிங்காவின் தமிழ் பதிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸும் சக்தி வாசுவும் நடிக்கின்றார், மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
தற்போது 7 நாட்கள், துரியோதனா என 2 தமிழ் படங்களிலும் பெயரிடப்படாத மலையாளப் படத்திலும் நடிக்கின்றார் சக்தி வாசு.