சென்ற வருடம் சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ராம் இயக்கத்தில், விஷ்ணு நந்திதா நடிப்பில் வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படம் பெறும் வெற்றியை பெற்றது.
வித்தியாசமான கதைக்களமும், திறமையான திரைக்கதையும் முண்டாசுப்பட்டி படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது.
தற்போது, முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம் மறுபடியும் சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திறகாக புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.