சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் – பார்த்திபன்
நல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியன் சினி கம்பைன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் “மாவீரன் கிட்டு”
“வெண்ணிலா கபடி குழு”, “நான் மகான் அல்ல”, “அழகர் சாமி குதிரை”, “பாண்டியநாடு”, “ஜீவா”, “பாயும் புலி”, போன்ற நல்ல வெற்றி படங்களை தந்த சுசீந்திரன் இப்படத்தை டைரக்ட் செய்கிறார். “வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமான விஷ்ணுவிஷால் மீண்டும் இப்படம் மூலம் இணைகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன், நாயகியாக ஸ்ரீ திவ்யா, சூரி மற்றும் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி பழனியில் ஆரம்பமானது, தொடர்ந்து 50-நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது,
’மாவீரன் கிட்டு’ இது ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம் தான் இது…
என்று இயங்குனர் சுசீந்திரன் தெரிவித்தார்
இசை : D. இமான்
ஒளிப்பதிவு : சூரியா
வசனம், பாடல்கள் : யுகபாரதி
எடிட்டிங் : காசி விஸ்வநாதன்
ஆர்ட் : சேகர்
நடனம் : ஷோபி
தயாரிப்பு மேற்பார்வை : கருணாகரன்
தயாரிப்பு : ஐஸ்வேர் கந்தசாமி,
. D.N. தாய்சரவணன்,ராஜீவன்