.
.

.

Latest Update

சூப்பர் ஹீரோக்களின் புதிய நகைச்சுவை அவதாரம் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ வழங்கி இருக்கும் ‘சூப் ஹீரோஸ்’


சூப்பர் ஹீரோக்களின் புதிய நகைச்சுவை அவதாரம் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ வழங்கி இருக்கும் ‘சூப் ஹீரோஸ்’

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிட்சயமான ஒரு சொல் ‘சூப்பர் ஹீரோஸ்’. சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன் என பல சூப்பர் ஹீரோக்களை பற்றி நாம் அதிகமாகவே கேள்வி பட்டிருக்கிறோம்…ஆனால் முதல் முறையாக ‘சூப் ஹீரோஸை’ பற்றி நமக்கு நகைச்சுவையோடு தெரியப்படுத்தி இருக்கிறது ‘சூப் ஹீரோஸ்’ என்னும் 38 நிமிட குறும்படம். தரமான குறும்படங்களின் மூலம் திறமையான கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனம் வழங்கி இருக்கும் இந்த ‘சூப் ஹீரோஸ்’ படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் ரிஷி கார்த்திக்.

ரிஷி என்னும் ஒரு சராசரி இளைஞன், ஒரு பெண் மீது காதல் கொள்கிறான்…ஆனால் அந்த பெண்ணிற்கோ சூப்பர் ஹீரோக்கள் மீது எல்லையற்ற பிரியம்…எனவே அந்த பெண்ணை கவருவதற்காக ரிஷி தன்னுடைய நண்பனான குமரேஷுடன் இணைந்து சூப்பர் ஹீரோவாக மாற முயற்சிக்கிறார்..அதன் ஆரம்பக் கட்டமாக, நகரத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வரும் பிரபல குற்றவாளிகளான ‘டியூக் பாய்ஸை’ தேடி கண்டு பிடிக்க கிளிம்புகின்றனர் ரிஷியும், குமரேஷும்….அவர்கள் இருவரும் ‘டியூக் பாய்ஸை’ பிடித்தார்களா? ரிஷி தன்னுடைய காதலில் வெற்றி பெற்றாரா என்பது தான் ‘சூப் ஹீரோஸ்’ படத்தின் மிச்ச கதை…ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை சிறப்பம்சங்கள் இந்த ‘சூப் ஹீரோஸ்’ குறும்படத்தில் நிறைந்து இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles