.
.

.

Latest Update

சூர்யாவின் ” தானா சேர்ந்த கூட்டம்” இன்று பூஜையுடன் ஆரம்பமானது..


சூர்யாவின் ” தானா சேர்ந்த கூட்டம்” இன்று பூஜையுடன் ஆரம்பமானது நவம்பர் 9 முதல் படபிடிப்பு துவங்குகிறது:

சூர்யா நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் K.E ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் ” தானா சேர்ந்த கூட்டம்” இப்படத்தின் பூஜை இன்று மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் திருக்கோவிலில் வைத்து நடைபெற்றது. இதில் சூர்யா ,கார்த்தி தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் விக்னேஷ்சிவன் , 2D ராஜசேகரபாண்டியன், ஒளிபதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், நடிகர் R.J. பாலாஜி, இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு இசை அனிருத். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 9 ஆம் தேதி அன்று துவங்குகின்றது. சூர்யாவின் நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள “சி3 – (S3)” படத்தின் டீசர் வருகிற நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் படத்துக்காக முற்றிலும் புதிய தோற்றதுக்கு சூர்யா மாறி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles