இயக்குனர் மனோஜ்குமாரிடம் பல படங்களில் உதவி இயக்கு னராக பணிபுரிந்து ., பின் அவரது தயாரிப்பிலேயே ராஜு சுந்தரம் – சிம்ரன் ஜோடி நடித்த ‘ஐ லவ் யூ டா ‘ படத்தை இயக்கியவர் ராஜதுரை . பிரபல இயக்குனர் சுராஜின் உதவியாளருமான ராஜதுரையின் இயக்கத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீனி.’
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ எனும் பேனரில் மதுரை.ஆர்.செல்வம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ள ‘ சீனி’ திரைப்படத்தில் அறிமுக நாயகர்கள் சஞ்சய் , பரத்ரவி இருவருடன் முன்னணி இளம் நடிகை ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 2015ம் ஆண்டின் இறுதியில் சென்சார் ஒரு கட் கூட கொடுக்காமல் ‘யு’ சர்டிபிகேட் வழங்கியிருப்பதுடன ‘சீனி’ தரமான படம் என., அதன் தயாரிப்பாளர் மதுரை ஆர்.செல்வத்தையும் , இயக்குனர் ராஜதுரையையும் அழைத்து பாராட்டும் தெரிவித்திருப்பதில் மேற்படி படத்தயாரிப்பு மற்றும் இயக்குனர்தரப்பு சந்தோஷத்தில் இருக்கிறது!
‘சீனி’ படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிபெண் நிருபராக வரும் ஓவியாவுடன்., சஞ்சய், பரத்ரவி , ராதாரவி , செந்தில் , ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன் , கஞ்சாகருப்பு , சின்னிஜெயந்த் , வையாபுரி, ரவிமரியா , தாஸ் , டி.பி.கஜேந்திரன், மனோஜ் குமார் , பாவாலட்சுமணன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் , மீரா கிருஷ்ணன் , புவனா உள்ளிட்ட ஒருபெரும் காமெடி பட்டாளமும் , நட்சத்திரப் பட்டாளமும் இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீதா என்ற யானையும் முக்கிய பாத்திரத்தில் ‘ சீனி’ படத்தில் நடித்துள்ளதும், அதன் பாகனாக காமெடி நடிகர் செந்தில் உருக்கமான பாத்திரம் ஏற்றுள்ளதும், பவர் ஸ்டாருக்கு இப்படத்தில் இரட்டை வேடம் என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது!
‘சீனி’ திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சினேகன் , விவேகா இருவரும் பாடல்கள் எழுத, ராதிகா , பாரதி இருவரும் நடனம் அமைத்திருக்கின்றனர். , சண்டை பயிற்சி – பவர் பாஸ்ட் பாபு , படத்தொகுப்பு – சாய் சுரேஷ், ஒளிப்பதிவு – நாகராஜன் , தயாரிப்பு மேற்பார்வை – ராஜா , தயாரிப்பு – மதுரை ஆர்.செல்வம் , எழுத்து, இயக்கம் – ராஜதுரை .
இத்தனை சிறப்புகளுடனும் 2015-ம் ஆண்டின் இறுதியில், சென்சாரின் ‘யு’ சான்றிதழ் மற்றும் ,தரமான படமெனும் பாராட்டு பத்திரத்துடனும் ., ‘வேலம்மாள்’ சினிகிரியேஷன்ஸ் பேனரில் 2016 – புத்தாண்டு ஜனவரி இறுதிக்குள் திரைக்குவருகிறது ‘சீனி ‘