அஜீத் அறிமுகமான “அமராவதி” மற்றும் தலைவாசல் உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த சோழாபொன்னுரங்கத்தின் சோழா கிரியேஷன்ஸ் மற்றும் மௌண்டன் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ கபடம் “
இந்த படத்தில் சச்சின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அங்கனாராய் நடிக்கிறார். மற்றும் ஆதித்யா, காதல்சரவணன், அணிகா, அஸ்வின், ஹேமா ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் – எம்.கே.மணி
ஒளிப்பதிவு – கே.திருநாவுக்கரசு
இசை – சாஷி / பாடல்கள் – நா.முத்துகுமார்
கலை – லோகு / நடனம் – கூல்ஜெயந்த், பாப்பி
எடிட்டிங் – கே.பாலசுப்ரமணியம்
தயாரிப்பு – சோழா.எஸ்.பொன்னுரங்கம்
கதை, திரைக்கதை எழுதி இயகுகிறார் ஜோதிமுருகன்.
படம் பற்றி இயக்குனர் ஜோதிமுருகனிடம் கேட்டோம்……..
எதிர்மறையான எண்ணம் கொண்ட ஜோடிகள் நிச்சயம் செய்துகொள்கிறார்கள். நிச்சயதார்த்ததிற்கு பிறகு இருவரும் பழகுகிறார்கள். பழக்கத்தின் போது அவளது நடவடிக்கைகள் அவனுக்கு ஒத்துப் போகவில்லை திருத்தி விடலாம் என்று முயற்சி செய்கிறான் ஹீரோ. அதில் அவன் வெற்றி பெற்றானா ? இல்லையா என்பதை விறுவிறுப்புடன் சொல்லி இருக்கிறோம்.படம் ரசிக்கும் படியான விதத்தில் இருக்கும். சச்சின் – அங்கனாராய் இருவரும் இந்த கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருகிறார்கள். இருவருக்கும் நல்ல பேர் கிடைக்கும்.
நல்ல தரமான படங்களைத் தயாரிக்கும் பட நிறுவனம் என்று பேர் வாங்கிய சோழா கிரியேசன்ஸ் மூலம் நான் அறிமுகமாகிறேன் என்பது எனக்கு பெருமையே! அத்துடன் நான் ராதாமோகன், செல்வராகவன், சிம்புதேவன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறேன்.
படப்பிடிப்பு சென்னை, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது.