கல்சன் மூவிஸ் தயாரிக்கும் முதல் படமான “பென்சில்” படபிடிப்பின் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. 25 பேர் கொண்ட குழு படத்தின் 2 பாடல்களை படம்பிடிக்க நாளை ஜப்பானில் உள்ள டோக்கியோவுக்கு பயணிக்கின்றனர்.
கவிஞர் தாமரை வரிகளில் “கண்களிலே கண்களிலே கடுகளவு தெரிகிறதே” மற்றும் “யாரை போலும் இல்லா நீயும், எல்லோர் போலும் உள்ள நானும்” என்ற இரண்டு பாடல்களுக்கு ஜீவி பிரகாஷ் குமாரும், ஸ்ரீ திவ்யாவும், நடன இயக்குனர் ஷெரிப்பின் அசைவுகளுக்கு நடனமாடவுள்ளனர்.
இயக்குனர் மணி நாகராஜ் இப்பாடல்களில் இதுவரை யாரும் பார்த்திராத ஜப்பானின் இயற்கையின் அழகையும், நகரத்தின் ஒளிவிளக்குகளையும் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காண்பிக்கவுள்ளார்.