.
.

.

Latest Update

ஜான்மேக்ஸ் தயாரிக்க V.C.வடிவுடையான் இயக்கும் “ சவுகார்பேட்டை “


IMG_0194

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “
இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார். மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை – ஜான்பீட்டர் / ஒளிப்பதிவு – சீனிவாசரெட்டி
பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா
கலை – எஸ்.எஸ்.சுசி தேவராஜ்
நடனம் – தினேஷ் / ஸ்டன்ட் – கனல்கண்ணன்
எடிட்டிங் – எலிசா
தயாரிப்பு நிர்வாகம் – ஜி.செந்தில்
வசனம் – ஷாம்மேனன்
கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் V.C.வடிவுடையான். இவர் தம்பிவெட்டோத்தி சுந்தரம் என்ற படத்தை இயக்கியதுடன், விரைவில் வெளியாக உள்ள “ கண்ணியம் காளையும் செம்ம காதல் படத்தையும் இயக்கி உள்ளார்.
தயாரிப்பு – ஜான்மேக்ஸ்
படத்தை பற்றி இயக்குனர் V.C.வடிவுடையானிடம் கேட்டோம்…
சென்னையில் உள்ள சவுகார்பேட்டை ஜனசந்தடி அதிகமுள்ள இடம் மட்டுமல்ல… பணம் அதிகளவில் புழங்கும் இடமும் கூட.. அப்படிப்பட்ட சவுகார்பேட்டையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கதை !
காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், திகில், ஹாரர் எல்லாமும் இருக்கும் கமர்ஷியல் படம் இது. ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று முடிவடைகிறது என்றார் வடிவுடையான்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles