மின்னுவது பொன் என்பதே திரை உலகின் இன்றைய கோட்பாடு. எதிலும் திட்டமிட்டு , வெற்றி மட்டுமே குறிக்கோள் என செயல்படும் , தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பெயர் பெற்ற இயக்குனர் லிங்கு சாமி துவக்கி வைத்த ‘ ஜிகினா’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.தனது நண்பர் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஜிகினா’ படத்துக்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்கி லிங்குசாமி வந்தது குறிப்பிட தக்கது.சமீபத்தில் வந்து பெரும் வெற்றி அடைந்த விஜய் வசந்த் நடித்த ‘ என்னமோ நடக்குது’ படத்தை வெளியிட்டதும் லிங்குசாமியின் ‘ திருப்பதி brothers ‘ நிறுவனத்தினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ ஜிகினா ‘ படத்தை ராகுல் PICTURES சார்பில் கே டி கே தயாரிக்கிறார்.’ தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் நாங்கள் திரை உலககிற்கு வர காரணம் திருப்பதி BROTHERS நிறுவனம் தான்.எங்களுடைய முதல் பட பூஜைக்கு லிங்குசாமி அவர்களே வந்ததோடு , காமெராவை துவக்கி வைத்து இருப்பது, என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்று பெருமையுடன் கூறினார் தயாரிப்பாளர் கே டி கே.
விஜய் வசந்த் கதாநயாகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளவர் சானியா. இவர்களோடு சிங்கம் புலி,’கும்கி ‘ அஷ்வின்,மற்றும் தற்போது தொலை காட்சியில் பிரபலமாகி வரும் ஒரு வளர்ந்து வரும் கலைஞர் ஒருவர் படத்தில் அறிமுகமாவது குறிப்பிட தக்கது.வித்தியாசமான கதை களம் உள்ள படங்களை இயக்கிய நந்தா பெரிய சாமி இந்த படத்தின் கதை,திரைகதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார்.
பாலாஜி ரங்கா ஒளிபதிவில், ஜோன் என்ற புதிய இசை அமைப்பாளர் யுக பாரதியின் பாடல்களுக்கு இசை அமைத்து அறிமுகமாக உள்ளார்
‘ஜிகினா’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை 28 ஆம் தேதி சென்னையில் துவங்கியது. முழு வீச்சில் படப்பிடிப்பு நடத்தி இந்த வருடம் இறுதியில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படப்பிடிப்பு குழுவினர்.
பெயரை போலவே மிகவும் உற்சாகத்துடன் , பிரகாசத்துடன் துவங்கிய ‘ஜிகினா ‘ படத்தின் ஒவ்வொரு காட்சியும் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும் ‘ என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி.