பென் கன்ஸோர்டியம் ஸ்டுடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B. சரவணன் இணை தயாரிப்பில், T.சிவகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் ‘அதிபர்’.இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, ராஜ்கபூர்,சரவணசுப்பையா, பாரதி கண்ணன், சங்கிலிமுருகன், பாவா லட்சுமணன், மதன்பாப், வையாபுரி, சம்பத்ராம்,மோகனராம், க.தா.கா.திருமாவளவன், ரேணுகா, கோவை சரளா, அழகு, கவிதா பூஜாரி, கோவை செந்தில், மாயி சுந்தர், தெனாலி, சுருளி, ஸ்டில்குமார், ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை – விக்ரம் செல்வா
பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா
ஒளிப்பதிவு – Philip விஜயகுமார்
கலை – M.G.சேகர்
நடனம் – சிவசங்கர், தினேஷ்
ஸ்டன்ட் – கனல் கண்ணன்
எடிட்டிங் – சஷிகுமார்
தயாரிப்பு நிர்வாகம் – அஷ்ரப், ஹக்கீம்
இணைதயாரிப்பு – P.B. சரவணன்
தயாரிப்பு – T.சிவகுமார்
இப்படத்தை “மாயி, திவான், மாணிக்கம்” போன்ற படங்களை இயக்கிய சூரியபிரகாஷ் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,
“செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என்று வாழ்க்கையை வகுத்துக் கொண்டுவாழும் ‘சிவா’ என்ற கதாபாத்திரத்தில் ஜீவன். நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டுவாழ்ந்து கொண்டிருக்கும் ‘ஈஸ்வரன்’ கதாபாத்திரத்தில் ரஞ்சித். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம் தான்படத்தின் கதை.
படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக்,லங்காவி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது,” என்கிறார் சூரியபிரகாஷ்.