.
.

.

Latest Update

‘ஜீவா’ ரௌடியாக நடிக்கும் ‘திருநாள்’ படப்பிடிப்பில் நிஜ ரௌடிகள் மோதல்


nayanthara-jiva-061114கோ. முகமூடி, ரௌத்ரம், நண்பன், யான் படங்களுக்குப் பிறகு ஜீவா நடிக்கும் படம் ‘திருநாள்’. இந்தப் படத்தில் ‘ஜீவா’ ரௌடியாக நடிக்கிறார். ரௌடி கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து ஜீவா இப்போது வேறொரு தோற்றத்தில் இருக்கிறார்.
கும்பகோணத்தில் நிஜ ரௌடிகள் சேஸிங்
‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. சந்து-பொந்து வழியாக ஜீவா ரௌடிகளை துரத்தும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, நிஜமாக இரண்டு ரௌடி கோஷ்டிகளுக்குள் அதே பகுதியில் சண்டை நடக்க, படக்காட்சியோடு நிஜ ரௌடிகளின் சண்டையும் தத்ரூபமாக படமாக்கியுள்ளார்கள்.
ஜீவா – நயன்தாரா
இந்தப்படத்தில் ஜீவா ஜோடியாக ‘ஈ’ படத்திற்குப் பிறகு மீண்டும் நயன்தாரா இணைகிறார். இவர்களுடன் ‘பாண்டியநாடு’ வில்லன் சரத்லோகித்தவா, கருணாஸ், மீனாட்சி, ஜோமல்லூரி, கோபிநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-மகேஷ் முத்துசாமி; இசை-ஸ்ரீ; சண்டை-சூப்பர் சுப்பராயன்; கலை-வி.சீனு; கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-பி.எஸ்.ராம்நாத்; தயாரிப்பு-எம்.செந்தில்குமார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles