.
.

.

Latest Update

ஞானவேல்ராஜாவிற்கு உதயநிதி கண்டனம்


கொம்பன் படத்திர்க்கு அரசியல் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு அப்படத்தை திரையிட்டு காட்ட நீதிமன்றம் கொம்பன் தயாரிப்பு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து நேற்று காலை கிருஷ்ணசாமி மற்றும் நீதிபதி தரப்புக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கிருஷ்ணசாமி ஏகப்பட்ட இடையூறுகளை செய்ய எரிச்சலடைந்த நீதிபதிகள் சிறிது நேரத்திலேயே கிளம்பி சென்றனர். கிருஷ்ணசாமி தரப்பு முழுமையாக படத்தை பார்க்காமல் சென்றனர். இதனையடுத்து கொம்பன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் சங்க தலவரான சரத்குமாருடன் நேற்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது கிருஷ்ணசாமி தரப்பினர் யாரோ ஒருவரின் தூண்டுதலால் தான் நடக்கிறதென்றும், இதுவே அவர்கள் படம் கடந்த வாரமோ அடுத்தவாரமோ வருவதாக இருந்திருந்தால் இந்த நிலமையாகியிருக்கதென்றும், 2ஆம் தேதி வெளிவரும் மற்றொரு படத்தின் போட்டி காரணாமகவே இது நடக்கிறதென்று மறைமுகமாக நண்பேண்டா படத்தின் தயாரிப்பாளர் உதயாநிதியை குறிப்பிட்டிருந்தார்.

இதை பற்றி இன்று உதயாநிதி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் தன் படம் ஏப்ரல் 2ல் வெளிவருகிறதென்று மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அறிவித்து விட்டதாகவும், கடந்த மாதம் 20ஆம் தேதியே கிட்டத்தட்ட 225 திரையரங்குகளை ஒப்பந்த படுத்தி விட்டதாகவும், எனவே ஏப்ரல் 2ல் கொம்பன் வெளிவந்தாலும் வந்திருக்காவிட்டாலும் அது தன்னை எந்த விதத்திலும் பாதித்திருக்காதென்றும், கிருஷ்ணசாமி தரப்பு கொம்பன் வெளியீட்டு தேதி அறிவிக்கு முன்னரே தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தியதையும் குறிப்பிட்டு, தன்னை தேவையில்லாமல் இப்பிரச்சனையில் இழுப்பதற்க்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles