சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி தஞ்சை மண்ணானது கால ஓட்டத்தில் தடம் புரண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதனை 1990 காலகட்டத்தை பின்புலமாக கொண்டு கதை அமைக்கப்பெற்றிருக்கிறது. தகப்பன் மற்றும் மகன், மகனுடன் வெட்டியாக சுற்றிதிரியும் நண்பர்கள் என நகரும் கதையினில் தனது மகன் மேல் தகப்பன் வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையினை மகன் போராடி ஜெயிக்கிறானா என்பதே திரைக்கதையாகும். மேலும் தஞ்சை மக்களின் நம்பிக்கை மற்றும் மரியாதையினை பரைசாற்றும் படமாகவும் இது இருக்கும்.
இப்படத்தில் கதையின் நாயகனாக இனிகோ பிரபாகர் மற்றும் நாயகியாக ஷைனி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் கயல் வின்செண்ட், தென்னவன், வேலா ராமமூர்த்தி, ஆரண்ய காண்டம் வசந்த், விஜய் டிவி ஹேமா மற்றும் புதுமுகமாக திருநங்கை பிரீத்திஷா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் பரித் எழுத்தாளர் கலைமாமணி கலைமணி அவர்களிடம் உதவியாளராகவும், கதிர்வேல் படத்தின் இனை இயக்குனராகவும் களவாணி படத்தின் நிர்வாக தயாரிப்பளாரகவும் பணிபுரிந்துள்ளார்.