திட்டமிட்டது போல் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’
தனித்துவமான தலைப்புகளை கொண்ட திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு…. தலைப்பை போல கதை களமும் தனித்துவமான சிறப்பை பெற்று இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் அந்த வரவேற்புக்கு காரணம்…. அப்படி ரசிகர்களின் மனதை திருடக் கூடிய திரைப்படமாக உருவெடுத்து வருவது தான் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. கேட்டவுடன் ஈர்க்க செய்யும் படத்தலைப்பு, சிறந்த நடிகர் – நடிகைகள், வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள் மட்டுமின்றி, புதிரான கதைக்களமும் இந்த படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
‘டூ மூவிபஃஃப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் இந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தில் சந்திரன் ( ‘கயல்’ ) – சாட்னா டைட்டஸ் முன்னணி கதாபாத்திரங்களிலும், ராதா கிருஷ்ணன் பார்த்திபன் மிக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் படத்தின் நடிகர் – நடிகைகள் மூலமாகவும், தொழில் நுட்ப கலைஞர்கள் மூலமாகவும் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்த ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படக்குழுவினர், தற்போது தங்களின் படப்பிடிப்பை திட்டமிட்ட படியே வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து தங்கள் படத்தை தொழில் நுட்ப ரீதியாக மேலும் மெருகேற்ற இவர்கள் தற்போது திட்டம் தீட்டி வருகின்றனர். வர்த்தக உலகினரை ஈர்க்க கூடிய விதத்தில், அற்புதமான காட்சிகளை கொண்டு உருவாகி இருக்கும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ திரைப்படம், இந்த ஆண்டின் பிரம்மாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.