.
.

.

Latest Update

தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவி சொத்துக்கள் ஜப்தி – வங்கி நடவடிக்கை


pizap.com14304764363351சுமார் 15 வருடங்களுக்கு முன்புவரை திரைப்பட விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கார் ரவிசந்திரன், விஜயகாந்ந் நடிப்பில் விக்ரமன் இயக்கிய வானத்தைப்போல படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தவர். தொடர்ந்து விஜய் அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்தும் … ஷங்கர் போன்ற முன்னணி இயக்குநர்களை வைத்தும் படங்களைத் தயாரித்தார்.

ஆரம்பத்தில் சில கோடி பட்ஜெட்களில் படங்களைத் தயாரித்து வந்தார் ஆஸ்கார் ரவி. அந்தப்படங்கள் வெற்றியடைந்து லாபத்தைக் கொட்டின. அதன் பிறகு அந்நியன், தசாவதாரம் படங்களை 30 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து பெரிய பட்ஜெட்டில் தயாரித்தவர், ஐ படத்தை 75 கோடிக்கு மேல்செலவு செய்து தயாரித்தார்.

அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து, அதற்காக 100 கோடி ரூபாய்க்கு மேல் படத்தயாரிப்பில் முதலீடு செய்தார். ஐடிபிஐ, ஐஓபி போன்ற வங்கிகளில் பல கோடி கடன்களை வாங்கித்தான் படங்களைத் தயாரித்து வந்தார் ஆஸ்கார் ரவி. குறிப்பாக ஐ படத்துக்காக மட்டுமே சுமார் 80 கோடிக்கு மேல் கடன் வாங்கினார் என்று அப்போது சொல்லப்பட்டது.

ஐ படத்தின் பேரில் பல கோடி கடன் பெற்ற ஆஸ்கார் ரவி, கடனை அடைக்காமலே படத்தை வெளியிட்டதால் இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன் அவர் மீது ஐஓபி வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஐஓபி வங்கியில் ஆஸ்கார் ரவி வாங்கிய சுமார் 84 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 97 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாதினால், சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் ரவியின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு, மற்றும் வேலூரில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் என மூன்று தியேட்டர்கள் ஆகிய சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது ஐஓபி வங்கி. இது குறித்த அவரது சொத்தை பறிமுதல் செய்வது தொடர்பாக, சொத்து சுவாதீன அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஐஓபி வங்கி.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles