காங்கிரஸ் கமிட்டி துணை தலைவரும் வசந்த் & கோ உரிமையாளருமான எச்.வசந்த குமார் – தமிழ்செல்வி தம்பதியரின் மகன் திரைப்பட தயாரிப்பாளரும், வசந்த் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனருமான V.வினோத் குமாருக்கும், டாக்டர் சிவனையா – எழிலரசியின் மகள் சிந்துவிற்கும் திருமணம் நேற்று ( 26.05.2016 ) காலை நாகர்கோவில், தேரேகால் புதூர் கங்கா கிரான்ட்யுர் மகாலில் நடைபெற்றது.
விழாவில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் பிரதமர் லால்பஹதூர் சாஸ்திரியின் பேரனும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளருமான அணில் சாஸ்திரி, தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள்,ஏராளமான தொழிலதிபர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.