.
.

.

Latest Update

தரமான படங்களை தரும் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்


V K D PRESS MEET (74)

தரமான படங்களை தரும் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்

மக்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றி பெற்ற படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனம் சீ.வீ.குமார் அவர்களின் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்”

இந்த நிறுவனம் இதுவரை பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி உட்பட 7 படங்களை தயாரித்துள்ளது. இவர்களின் தயாரிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிட பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய திரைப்பட விழாவாக கருதப்படும் சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்நிருவனம் தயாரித்த படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடம் அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் ரமேஷ் இயக்கத்தில் வெளிவந்த “தெகிடி” திரைப்படமும், விஷ்ணு மற்றும் நந்திதா நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த “முண்டாசுப்பட்டி” திரைப்படமும் திரையிடப்படவுள்ளன.

2012 ஆம் ஆண்டு இவர்கள் தயாரித்த அட்டகத்தி மற்றும் பிட்சா திரைப்படமும், 2013 ஆம் ஆண்டு சூதுகவ்வும் திரைப்படமும் சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் திரையிட தேர்தெடுக்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.

இப்படங்களின் அனைத்து இயக்குனர்களும் புதுமுகங்களே! சிறந்த படங்களை மட்டுமன்றி சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது சீ.வீ.குமாரின் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles