கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படத்தின் டைட்டிலை ஒரு வழியாக தற்போது அறிவித்துவிட்டனர். இப்படத்திற்கு ”என்னை அறிந்தால்” என்று தலைப்பு வைத்துள்ளனர். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் த்ரிஷா நடிக்கிறார்கள். காமெடியனாக விவேக் நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜும், ஒளிப்பதிவாளராக டான் மெக்கத்தூர் பணியாற்றுகிறார்கள்.
இன்று டான் மெக்கதூர் பிறந்த நாள் என்பதனால் அவரின் பிறந்த நாள் பரிசாக இந்த டைட்டிலை வெளியிட்டுள்ளார்கள். தலைப்பை எதிர் நோக்கி தவம் கிடந்த அஜித் ரசிகர்களுக்கு இன்று தான் தீபாவளி வந்ததுபோல் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். படம் டிசம்பர் அல்லது பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.