.
.

.

Latest Update

தீபாவளியை முன்னிட்டு நடிகர் சங்கம் சார்பில் ரஜினி, கமல் உட்பட 3,500 உறுப்பினர்களுக்கும் வேட்டி, சேலைகள்…


Pandavar Team Stills (4)​​தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல் உட்பட அனைவருக்கும் அனைவருக்கும் பரிசு பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது !!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிதாக பொறுபேற்றுள்ள தலைமை, வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களான சூப்பர் ஸ்டார் ரஜினி,உலக நாயகன் கமல் உட்பட மொத்தம் 3,500 நபர்களுக்கும் விழாக்கால பரிசாக ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் இதனுடன் உறுப்பினர்களுக்கு ஒரு பை இனிப்பும் வழங்கப்படவுள்ளது. இந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் உறுப்பினர்களின் வீட்டிற்க்கே சென்றடையும் வகையில் ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்கள் பற்றிய விவரம் அறியும் கணக்கெடுப்பு விரைவில் துவங்கவுள்ளது.

நடிகர் சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் பத்து பேர் தனி குழுக்களாக மாவட்டவாரியாக பிரிக்கப்பட்டு ,எல்லா மாவட்டங்களுக்கும் சென்று அங்குள்ள நாடக நடிகர்களை நடிகைகளை அவர்களுடைய வீட்டிற்க்கே நேரில் சென்று அவர்களை சந்தித்து அவர்களது வாழ்வாதாரம் பற்றியும் ,வருமானம் மற்றும் அவர்களது தற்போதைய நிலை , செய்யும் தொழில் போன்றவைகளை நேர்த்தியாக கணக்கெடுத்து தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு அதற்க்கான பனி தீபாவளி பண்டிகைக்கு பின் துவங்கி மேல் கூறியவாறு முதற்க்கட்ட வேலையாக செய்துமுடிக்கப்படவுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles