.
.

.

Latest Update

தீபாவளி அன்று வெளியாகும் “ இஞ்சிமுறப்பா “


Inji Murappa Movie Stills (3)புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் – ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ இஞ்சி முறப்பா” இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். தங்கை வேடத்தில் ஸ்ரீ என்ற புதுமுகம் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக கிருஷ்ணராஜ் நடிக்கிறார். மற்றும் ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா, சிரி, ரகு ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – P.R.K. ராஜு
பாடல்கள் – பழனிபாரதி
இசை – மணிசர்மா
கலை – ஹரி.K
நடனம் – சொர்ணா
ஸ்டன்ட் – நந்து
தயாரிப்பு – A.P.ராதாகிருஷ்ணன், மலர்கொடி முருகன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – S. சகா.
இவர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர். தங்கை மேல் அதிக பாசம் கொண்ட ஒரு அண்ணனின் கதை இது. தனது தங்கையின் வாழ்க்கைக்காகப் போராடும் அண்ணனின் கதையை காதல், மோதல், காமெடி என்று அதிரடியாக உருவாக்கியுள்ளோம். இது ஒரு பக்கா கமர்ஷியல் படம் என்றார் இயக்குனர். வஜ்ரம் படத்தை தயாரித்ததுடன் சதுரன் படத்தை உலகமுழுவதும் வெளியிட்ட ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ் பட நிறுவனம் இந்த படத்தை வருகிற தீபாவளி அன்று வெளியிடுகிறது .

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles