.
.

.

Latest Update

தீபாவளி சிறப்பு பரிசுகள் வழங்கிய தென்னிந்திய நடிகர் சங்கம்…


Nadigar Sangam Gift To Actor And Actress Stills (3)தென்னிந்திய நடிகர் சங்க மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சி இதில் ரூபாய் 25 லட்சம் செலவில் 3250 நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தலைமையில் தீபாவளி சிறப்பு பரிசான வேஷ்டி,சட்டை,சேலை மற்றும் இனிப்பு ஆகியவைகளை சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான 2000 நபர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் விஷால் பேசியது ,நாங்கள் வெற்றி பெற்ற உடனேயே நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோருக்கும் ஸ்வீட் பாக்ஸ் Nadigar Sangam Gift To Actor And Actress Stills (4)கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தோம். உறுப்பினர்கள் அனைவரும் இதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அடைந்துள்ள சங்க உறுப்பினர்களை பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. எங்களுக்கு எப்படி எல்லோரும் திரண்டு வந்து தேர்தலில் வாக்களித்தார்களோ அதே போல் அவர்கள் அனைவரையும் சந்தித்து நாங்கள் அவர்களுக்கு இந்த பரிசுப்பு பொருட்களை வழங்கி உள்ளோம்.இந்த நடிகர் சங்க நிலத்தில் அமர்ந்து இதை போன்ற நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் ஆசை.. அந்த ஆசையை நிறைவேற்ற தான் நாங்கள் இதை Nadigar Sangam Gift To Actor And Actress Stills (7)செய்துள்ளோம். துணை நடிகர்கள் நாடக நடிகர்கள் என்று எந்த வித பிரிவும் இல்லாமால் எல்லோரும் ஒரே குடும்பமாக இங்கு திரண்டு உள்ளது அழகான ஒரு விஷயம். இங்கே அனைவரும் நாற்காலியில் அமர்ந்து ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு இருப்பது சிறப்பாக உள்ளது.இதெல்லாம் அவர்களுக்கு மறக்க இயலா நினைவுளாக நிலைத்திருக்கும் என்பது உறுதி.இதற்க்கு அடுத்தபடியாக அவர்கள் அனைவரும் ஆசைப்பட்டது போல் இங்கே நடிகர் சங்க கட்டிடம் வரும் , கட்டிடம் வந்ததும் இங்கே நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும் என்றார் பொதுச்செயலாளர் நடிகர் விஷால்.​

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles