தொல்லைக்காட்சி திரைப்படத்தின் பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. தரண் இசையில் L.R.ஈஸ்வரி குத்து பாடல் ஒன்றை பாடினார் நா.முத்துகுமாரின் வரிகளில் இவர் பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் குறித்து அவர் நினைவு கூறும்போது,இந்த பாடலில் இருக்கும் வரிகளும் இசையும் அருமையாக இருக்கிறது மீண்டும் ஒரு “கலாசலா” பாடலைப்போல் வெற்றி பெரும் என்று வாழ்த்தினார். ‘கயலாலயா நிறுவனம்’ சார்பாக பாலசெந்தில்ராஜா இந்த படத்தை தயாரிக்க M.சாதிக்கான் இயக்கத்தில் அஸ்வின், ஜனனி ஐயர், ஆதவன், சுப்பு பஞ்சு, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.இந்த பாடலின் படபிடிப்பிற்காக கும்பகோணம் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைத்து படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.