.
.

.

Latest Update

தோழா’ படத்திற்கு, உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ பிச்சர்ஸ் பாராட்டு!


Thozha Movie Stills (9)சமீபத்தில் வெளியான தோழா திரைப்படம், அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ சினிமாஸ் தனது பாராட்டு மழையை தோழா படத்திற்கு பொழிந்துள்ளது. சுமார் 120 ஆண்டிற்கு முன் பிறந்தது ‘கௌமான்ட்’ நிறுவனம்; இந்நிறுவனத்தால் 2011 ஆம் ஆண்டு பிரான்ஸில் வெளியான திரைப்படம் தான் ‘தி இன்டச்சபல்ஸ்’. இந்த படத்தை முதன் முதலில் ரீமேக் செய்த தோழாபடக்குழுவினரையும், குறுகிய காலத்தில் இதனை தயாரித்து வழங்கிய PVP சினிமாஸிற்கும் தனது மனமார்ந்த நன்றிகளை ‘கௌமான்ட்’ நிறுவனம் தெரியப்படுத்தி உள்ளது. மேலும் இப்படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுத்தந்தகுநீத் மோங்கா அவர்களுக்கும் தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளது ‘கௌமான்ட்’ சினிமாஸ்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles