நடிகர் சங்கம் தீபாவளி பரிசு வழங்கும் விழா
தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் அனைத்து உறுப்பினர்கள் குடும்பங்களுக்கும் தீபாவளி பரிசாக புது துணிமணிகள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்குகிறது. வெளியூர் உறுப்பினர்களுக்கு சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன், உதயா, ஹேமசந்திரன், எம்.ஏ.பிரகாஷ் ஆகியோர்கள் மேற்பார்வையில் இன்று பரிசுகள் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா வரும் 23ஆம் தேதி ஞாயிறு அன்று பகல் 11 மணிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் திரு.நாசர் தலைமையில் தி.நகரிலுள்ள நடிகர் சங்கம் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் மூத்த நடிகர், நடிகைகள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.