.
.

.

Latest Update

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸடார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு


IMG_5907

IMG_5908

IMG_5910

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸடார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு

“நினைத்தாலே இனிக்கும்” உட்பட பல படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்து வருவது உலகமறிந்ததே.

மேலும் லிங்கா படத்தின் தயார்ப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஜெயப்பிரதா அவர்கள் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக லிங்கா படபிடிப்பின் போது சந்தித்துள்ளார். அப்போது தான் தயாரித்து கொண்டிருக்கும் “உயிரே உயிரே” படத்தின் முன்னோட்டத்தை காண்பித்துள்ளார். படத்தை வெகுவாக பாரட்டிய சூப்பர்ஸ்டார் உயிரே உயிரே படத்தின் முன்னோட்டத்தை தன் படம் லிங்கா வெளியாகும் திரையரங்குகளில் இணைக்குமாறு தயாரிப்பு தரப்பிடம் கேட்டுள்ளார்.

சூப்பர்ஸ்டாரின் பெருந்தன்மையை கண்டு பெருமகிழ்ச்சியுற்ற நடிகை ஜெயப்பிரதா தனது நன்றியை தெரிவித்தார்,

உயிரே உயிரே படத்தில் நடிகை ஜெயப்பிரதா அவர்களின் மகன் சித்து கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். A.R. ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles