.
.

.

Latest Update

நடுக்காட்டில் குத்தாட்டம் போட்ட மன்சூர் அலி கான்…..


Kilambittangaiyaa -2ஹெவன் எண்டர்டைன்மென்ட் வழங்கும் ”கிளம்பிட்டாங்கய்யா ….கிளம்பிட்டாங்கய்யா” எனும் முழு நீள காமெடி புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளது .

இத்திரைப்படத்தின் கதாநாயகனாக பாடகர் மனோவின் மகன் ரித்திஷ் ,.கதாநாயகியாக சுவாதி (இனியா தங்கை ) மற்றும் பாக்யராஜ் ,R.சுந்தராஜன் ,அனு மோகன், மன்சூர் அலி கான் ,பவர் ஸ்டார் ,R .V உதய குமார் ,நெல்லை சிவா ,நிர்மலா ராவ் , என பெரிய நகைச்சுவை பட்டாளமே நடிக்கின்றனர். மற்றுமொரு கதாநாயகர்களாக விஷ்வா ,கண்ணன் ,ராஜ் நடிக்கின்றனர்.

இப்படத்தில் மன்சூர் அலி கான் காட்டு வாசிகளின் தலைவனாக மிகப்பெரிய கதாப்பாத்திரத்தில் நடித்து ,மிகப்பெரிய குத்தாட்டம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இதில் 250 பேர்கொண்ட குருப் டான்சில் 30 பெண்களுக்கு நடுவில் ஸ்பீட் டான்ஸ் போட்டு டான்சர்களை மிரள வைத்துள்ளார் என்பது தனி சிறப்பு .

நகர வாழ்க்கையில் தொடங்கும் இந்த கதை,நான்கு பேர் கொண்ட குழுவிடம் ஒரு வேலையை ஒப்படைக்கின்றனர் .அந்த வேலையை முடிக்கமுடியாமல் நான்கு பசங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது .அங்கே குளறுபடி ஆகி முடிக்கமுடியாமல் என்கவுண்டர் வரைக்கும் போய் காடு ,காட்டு வாசி, பேய் பங்களா என சுற்றி நகைச்சுவையுடன் முடியும் முழு நீள காமெடி படம் .

இதன் படப்பிடிப்பு திருச்சி ,சேலம் ,கொல்லிமலை மற்றும் சென்னை அதன் சுற்று புறங்களில் நடைப்பெற்றது .
கதை -திரைக்கதை -வசனம் -இயக்கம் ரசாக் கான் ,ஒளிப்பதிவு – பாஸ்கர் ,ராஜ்குமார் ,இசை – M .S ஸ்ரீகாந்த் , தயாரிப்பு ஹெவன் எண்டர்டைன்மென்ட்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles