.
.

.

Latest Update

“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு


“ நட்பதிகாரம் – 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு
ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “ நட்பதிகாரம் – 79“ இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத், அம்ஜத்கான் இருவரும் நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள். மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கலக்கபோவது யாரு விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார்.
ஒளிப்பதிவு – R.B.குருதேவ் / இசை – தீபக் நிலம்பூர்
எடிட்டிங் – சாபு ஜோசப். இவர் சென்ற வருடம் தேசிய விருது வென்றவர்.
பாடல்கள் – கபிலன், ரவிச்சந்திரன்
நடனம் – ராஜூசுந்தரம், பிருந்தா, விஜி
தயாரிப்பு – D.ரவிகுமார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ரவிச்சந்திரன்.

நட்பதிகாரம் படத்திற்காக இயக்குனர் ரவிச்சந்திரன் எழுதிய
“ சொல்லு சொல்லு
சொல்லம்மா – நீ
உண்மை உண்மை சொல்லம்மா “ என்ற பாடல் தீபக் நிலம்பூர் இசையில் தேவா அவர்கள் பாட பதிவு செய்யப்பட்டது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles