.
.

.

Latest Update

நாசர் முக்கிய வேடம் ஏற்கும் திகில், மர்மங்கள் நிறைந்த “ குற்றம் நடந்தது என்ன “


ஜி.வி.பி. பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜி.வி.பெருமாள் தயாரிக்கும் படத்திற்கு “ குற்றம் நடந்தது என்ன “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விக்னேஷ் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் விஜய் டிவி யில் விஜே வாக இருக்கிறார். மற்றும் ஸ்ரீதேஜா, பாலு, இருவரும் விக்னேஷ்கார்த்திக்குடன் இன்னைந்து நாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நாசர் நடிக்கிறார்.நாயகிகளாக பிரியா, ஊர்மிளா ஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜி.வி.பெருமாள், ரவிபிரசாத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
kutram Nadanthathu Enna Movie Stills (5)ஒளிப்பதிவு – திருமலா – விஜய் வல்சன்
இசை – நரேஷ்
பாடல்கள் – டாக்டர் கிருதயா, ஜெகன், லோகா
நடனம் – ஜாய் மதி / கலை – ராஜேஷ்
எடிட்டிங் – கார்த்திக் சீனிவாஸ்
தயாரிப்பு நிர்வாகம் – மணிமாறன்
தயாரிப்பு – ஜி.வி.பெருமாள்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – சசிதர். இவர் பாலிவுட்டில் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். இவரிடம் படத்தை பற்றி கேட்டோம்.. தென்றலாக வீசும் காற்றுதான் புயலாகவும் – அமைதியான நடுக்கடல் தான் சுனாமியாகவும் – மாறுவதைப் போல மென்மையான குணாதிசயம் கொண்ட ஒரு பெண் எப்படி அதிபயங்கர குணம் கொண்டவளாக மாறுகிறாள் என்பது தான் கதை ! படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா, ஆந்திரா, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles