மதுரை-தொண்டி சாலை,சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி. இவரை 1985-ல் இயக்குநர் பாண்டியராஜன் ‘ஆண் பாவம்’ படத்தில் அறிமுகப்படுத் தினார். இப்படத்தில் இளையராஜா வின் இசையில் இவர் பாடிய பாடல் புகழ்பெற்றது. 1993-ல் இவரது கலைச் சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கலைமாமணி விருது பெற்றவர்,
சினிமா மூலம் நாட்டுப்புறப் பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்த நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி வயது-80, அரசு வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் வாழ்க்கை நடத்தி வறுமையில் வாடிக்கொண்டு இருக்கிறேன் என்றும் மருத்துவச் செலவுக்கும், நல்லது கெட்டதுக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றேன், சுமார் 10 சினிமா படங்களில் நடித்தும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகக் கூட சேர்க்காமல் கைவிடப்பட்டேன் என்றும் வருந்தி சமிபத்தில் `தி இந்து’ நாளிதழில் செய்தியாக வெளிவந்ததை படித்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் புரட்சி தளபதி விஷால் அவர்கள் உடனே சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி உள்ள நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி அம்மா அவர்களுக்கு உதவி தொகை வழங்கினர் மற்றும் அவர் ஒரு வாரத்திற்குல் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கு தென்னித்திய நடிகர் சங்கத்திலும் ஆணையிட்டார்.