.
.

.

Latest Update

நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என்றார் விஷால்.


நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இனைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமை நடிகர் விஷால் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இனைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து நடிகர் விஷால் பேசியது :- இது குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம் தாங்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே அழைத்து வந்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறேன். இது மிகச்சிறந்த மருத்துவ முகாமாகும் தாங்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அழைத்து வருமாறு கேட்டு கொள்கிறேன் என்றார் விஷால்.

நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாமில் ஒரு குழந்தைக்கு விஷால் தேவி என பெயரிட்டார்.

நடிகர் சங்கத்தை பற்றி குறை கூறுபவர்கள் ஆதாரம் இருந்தால் நிருபிக்கட்டும் பழைய முறைகேடுகள் பற்றிய எல்லா தகவல்களையும் இன்னும் 10 நாட்களில் நாங்கள் வெளியிடுவோம். வாராஹியிடம் ஏதாவது ஆதாரம் இருப்பின் அவர் என்னை வந்து நேரடியாக சந்திக்கட்டும். யார் வேண்டுமானாலும் என்ன குற்றசாட்டுகளை வேண்டுமானாலும் கூறலாம் அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். நாங்கள் இன்னும் டெண்டரை விடவில்லை எங்களுக்கு இன்னும் சி.எம்.டி.ஏ approval வரவில்லை. வாராஹி சொல்வதில் உண்மை இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இதுவரை எந்த கடிதமும் எனக்கு வரவில்லை , நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என்றார் விஷால்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles