.
.

.

Latest Update

“நாளை முதல் குடிக்கமாட்டேன்”


unnamedஇயக்குனர் ஆர். பாண்டியராஜின் டபுள்ஸ் மற்றும் பல இயக்குகனர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கோ.செந்தில்ராஜா நாளை முதல் குடிக்கமாட்டேன் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிறார்.

மதுவிற்கு அடிமையான ஒருவன் தன் வாழ்க்கையில் எதையெல்லாம் இழக்கிறான், அதனால் அவனுக்கு ஏற்படும் பிரச்சனையில் இருந்தும் குடிப்பழக்கத்தில் இருந்தும் எப்படி மீண்டு வருகிறான் என்பதை நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதையுடன் கூறும் படமே “நாளை முதல் குடிக்க மாட்டேன்”.

இப்படத்தில் ராஜ், காந்தராஜ், சம்ர்த்தின், பனிமதி போன்ற புதுமுகங்கள் நடிக்க முதல் கட்ட படபிடிப்பு இதுவரை படபிடிப்பு நடந்திறாத கள்ளகுறிச்சி மற்றும் சின்ன சேலம் அருகே உள்ள வாசுதேவனூர், ராயப்பனூர், எலித்தூர் போன்ற எதார்த்தம் மாறாத கிராமப்புறங்களில் நடந்து முடிந்துள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு “புன்னகை” வெங்கடேஷ், இசை ஆர்.சிவசுப்புரமணியன், சண்டைப்பயிற்சி மாஸ் மனோ, நடனத்தை ஜாய்மதி அமைத்து தர தயாரிப்பு மேற்பார்வையை P.தேவன் கவனிக்க இணைத்தயாரிப்பு செய்கிறார் G. இளவரசி.

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு கொண்டுவருவதற்காக பரபரப்பாக அடுத்த கட்ட படபிடிப்பு பைத்தந்துறை, தென் செட்டியந்தல், நமச்சிவாயபுரம் ஆகிய கிராமப்பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு இம்மாதம் படபிடிப்பு தொடரவுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles