பசங்க, கோலிசோடா நடிகர்கள் நடிக்கும்
“ வஜ்ரம் “
S.D.ரமேஷ்செல்வம் இயக்குகிறார்
விஜயகாந்த் நடித்த “ உளவுத்துறை” அருண்விஜய் நடித்த ஜனனம் போன்ற படங்களை இயக்கியவர் S.D.ரமேஷ்செல்வன் இவர் அடுத்து இயக்கும் படத்திற்கு “வஜ்ரம் “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார்.
“வஜ்ரம் “ படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சனா, நாகு ஆகியோரும் நடிக்கிறார்கள்.
வசனம் – லோகிதாஸ்
ஒளிப்பதிவு – A.R.குமரேசன்
சினேகன் பாடல்களுக்கு பைசல் இசையமைக்கிறார்.
கலை – மகேஷ்
நடனம் – சிவசங்கர்
ஸ்டன்ட் – சுப்ரீம் சுந்தர் – ஆக்ஷன் பிரகாஷ்
எடிட்டிங் – மாரீஸ்
தயாரிப்பு நிர்வாகம் – சிவசங்கர், செந்தில், ஜெயன்
தயாரிப்பு – P.ராமு
கதை, திரைக்கதை,இயக்கம் S.D. ரமேஷ்செல்வன்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…..
இன்று உலகம் முழுக்க பிரச்சனையாகி வருவது வருங்காலத்தினரின் அடிப்படைத் தேவையான கல்வி பற்றித்தான். இன்று அங்கீகரிக்கப்பட்ட கொள்ளேயே கல்விதான் இதை தான் இந்த படத்தில் சொல்கிறோம். கேட்டு வாங்கவேண்டிய உரிமை கொண்ட கல்வியை பணம் கட்டி பெற்றுக் கொண்டிருக்கிற அவலம் தான் இன்றைய தலைமுறையினரின் பிரச்னை.
இந்த படத்தில் இதை கமர்ஷியல் கலந்து அதிரடி படமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
சென்னை, மூணார், சாலக்குடி மற்றும் அசாம் மாநிலத்திலும் படப்பிடிப்பு நடக்கிறது என்றார் இயக்குனர்.