.
.

.

Latest Update

படு பயங்கரமான பேய் காட்சிகளுடன் இம்மாதம் 26 ம் தேதி வெளியாகும் “சவுகார்பேட்டை”


Sowkarpettai Movie New Stills (2)மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்திருக்கிறார் . நாயகியாக ராய்லட்சுமி நடித்திருக்கிறார். மற்றும் சரவணன், சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி,மனோபாலா, விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவைசரளா, பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் – துரை.P.G, இசை – ஜான்பீட்டர், ஒளிப்பதிவு – சீனிவாசரெட்டி, பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா, கலை – எஸ்.எஸ்.சுசி தேவராஜ், நடனம் – தினேஷ்,ராபர்ட், ஸ்டன்ட் – கனல்கண்ணன், எடிட்டிங் – எலிசா
தயாரிப்பு மேற்பார்வை – சங்கர், தயாரிப்பு – ஜான்மேக்ஸ் – ஜோன்ஸ், கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான்.

Sowkarpettai Movie New Stills (10)படம் பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்…

சவுகார்பேட்டை முழுக்க முழுக்க பேய் படம். இந்த படம் ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி இருவரது சினிமா வாழ்கையில் மிக பெரிய திருப்புமுனை படமாக இருக்கும். சுமன் இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படு வேகமான திரைக்கதையும், படு பயங்கரமான காட்சிகளும் அனைவரையும் ரசிக்க வைக்கும்.

Sowkarpettai Movie New Stills (29)சவுகார்பேட்டை படம் சிறப்பாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் எனக்கு பொட்டு படம் இயக்கும் வாய்பையும் கொடுத்துள்ளார். பொட்டு படத்தை தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிக்கும் மற்றுமொரு படத்தை நான் இயக்குகிறேன் அந்த படத்தையும் ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ்,ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். அதுவும் பேய் படமா இல்லையா என்பதை விரைவில் அறிவிப்போம். இதே நிறுவனத்தில் நான் இயக்கும் மூன்றாவது படம் அது.
சவுகார்பேட்டை படத்தை இம்மாதம் 26 ம் தேதி ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் உலகமுழுவதும் வெளியிடுகிறது என்றார் இயக்குனர் வடிவுடையான்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles