வரவிருக்கும் படங்களில் காரசாரமாக விவாதிக்க படும் படம் ‘மசாலா படம்’.சினிமாவைப் பற்றிப் பல படங்கள் வந்து இருக்கலாம் , ஆனால் சினிமாவை விமர்சிப்பவர்கள் பற்றியும் , சினிமா சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றியக் கதைதான் ‘மசாலா படம்’.பிரபல ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் இயக்கம் இப்படத்தை தயாரித்து இருப்பவர் ஆல் இன் Pictures விஜய் ராகவேந்தர்.
வெவ்வேறு குண நலன் உடைய மூன்றுக் கதா பாத்திரங்களை சுற்றி சுழலும் ‘மசாலா படம் ‘ சமூக வலைதளங்களில் திரைப்படங்களை வறுத்து எடுக்கும் போக்கை பற்றிய கதை ஆகும்.பாபி சிம்மா மற்றும் மிர்ச்சி சிவா இரண்டு வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கும் இந்தப் படத்தில் கௌரவ் முக்கியம்மான பாத்திரத்தில் நடித்து உள்ளார்.
பொறியாளர் கல்வி தகுதி பெற்ற எனக்கு நடிப்பின் மேல் தீவிரக் காதல் உண்டு.அதற்காகவே பிரத்தியேகமாக உள்ள பயிற்சி அரங்குகளில் பயின்றேன்.எல்லா மொழிப் படங்களையும் பார்த்து நடிப்பை பயின்றேன்.இந்த நேரத்தில் தான் இயக்குனர் லக்ஷ்மணை நேரில் சந்தித்தேன்.அவர் மசாலா படத்துக்காக ப்ளே பாய் கதாப் பாத்திரம் ஒன்று உள்ளதாகவும் அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கருதுவதாகவும் கூறி என்ன தேர்ந்து எடுத்தார்.பல்வேறு படங்களை பல மொழிகளில் பார்த்து இருந்த எனக்கு இந்தக் கதைக்களம் மிக வித்தியாசமாக தெரிந்தது. மிர்ச்சி சிவா , பாபி சிம்மா , நான் உட்பட மூன்று நாயகர்கள் இருந்தாலும் நாங்கள் கிளைமாக்ஸ் காட்சியில் தான் ஒரே பிரேமில் வருவோம். அந்த அளவுக்கு வித்தியாசமான திரைக் கதை அமைத்து உள்ளார் லக்ஷ்மன்.
கார்த்திக் ஆச்சாரியாவின் இசை மூலம் படம் பட்டி தொட்டி எங்கும் இன்றுப் பிரசித்தி எனலாம் இந்த மாதம் 9ஆம் தேதி திரைக்கு வெளிவர உள்ள மசாலா படம் நிச்சயம் வெற்றி பெரும் என படம் பார்த்தவர்கள் கூறும் போது உற்சாகமாக உள்ளது. எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர் லக்ஷ்மன், தயாரிப்பாளர் விஜய் ராகவேந்தர்,ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி எனக் கூறினார் இளம் நடிகர் கௌரவ்.