கககபோ இத்திரைப்படத்தின் single track வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளிவர உள்ளது. இந்த பாடல்களை சின்னத்திரை நட்சத்திரங்கள் தாமரை தொடரில் நடித்த சாய் பிரசாத்,தென்றல் தொடரில் நடித்த காவி வர்ஷினி, நாதஸ்வரம் தொடரில் நடித்த கிருத்திகா,கோலங்கள் தொடரில் நடித்த ஷ்யாம்,வாணி ராணி தொடரில் நடித்த நீலிமா மற்றும் பாடகர் ஜகதீஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.இப்படம் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.அதேபோல் இந்த பாடலும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது எனவே இப்பாடலை காதலர் தினத்தன்று வெளியிடுகிறார்கள். இத்திரைப்படத்தில் பவர் ஸ்டார், சிங்கம் புலி,m.s. பாஸ்கர், கருணாஸ், மதன் பாப், மயில்சாமி,ரோபோ ஷங்கர் உட்பட 25க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளதாக இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு விஜய் அவர்கள் கூறியுள்ளார். இத்திரைப்படத்தை செல்வி சங்கரலிங்கம் தயாரித்துள்ளார்.