பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டனுக்கான ஏலம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் சென்னை அணியை நடிகர் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜயபிரபாகரன் அவர்கள் எடுத்துள்ளார். இதற்கு சென்னை ஷ்மாஷர்ஸ் (Chennai Smashers) என்று பெயர் சூட்டியுள்ளார். சென்னை அணியில் விளையாட பி.வி. சிந்து (P.V. Sindhu), சிக்கிரெட்டி (Sikkireddy), ஜெர்ரிசோப்ரா (Jerrychopra), கிருஷ்ணபிரியா (Krishnapriya) ஆகிய இந்திய வீரர்களும், சோனி (Sony), சைமன்சன்டோசோ Simonsantoso, பியா (Pia) ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தை சேர்ந்த கிரிஷ்ஆட்காக் (Chrisadcock), பிரான்ஸை சேர்ந்த பிரிஷ் (Brice), கனடாவை சேர்ந்த டோபி (Toby) ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்த பிரீமியர் லீக் பேட்மிண்டன் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியோடு வரும் ஜனவரி 2-ம் தேதி மும்பையில் ஆரம்பமாகிறது. இப்போட்டி மும்பையில் தொடங்கி சென்னை, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது, இதன் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறுகிறது.
சென்னை அணியின் பயிற்சியாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இன்னும் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதனை விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிப்பேன் என்றும், சென்னை ஷ்மாஷர்ஸ் அணி இந்த தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் அதில் 50% தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக அளிப்பேன் என்றும் அணியின் உரிமையாளர் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.