புதுமுகங்கள் நடிக்கும்
“ அதிரடிப்படை “
பர்னா புரொடக்ஷன்ஸ் & சிவண்டு ஆர்ட்ஸ் பட நிறுவனங்களின் சார்பாக இந்துலேகா மோகன், டிட்டு வின்சென்ட் தயாரிக்கும் படம் “ அதிரடிப்படை “ ஸ்ரீகுமார் நாயகனாகவும், தேவிகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் அனைவருமே புதுமுகங்கள்.
ஒளிப்பதிவு – பென்னி அசம்சா
பாடல்கள் – ஹரீஷ் / இசை – தேவதாஸ்
எழுத்து – அமல்
தயாரிப்பு மேற்பார்வை – கிறிஸ்துதாஸ்
இயக்குபவர் – அஸ்வினி குமார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
ஸ்ரீகுமார் – தேவிகா இருவரும் வெவ்வேறு தனியார் தொலைக் காட்சிகளில் வேலை செய்கிறார்கள். ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் இவர்களின் சந்திப்பு காதலாக மாறுகிறது. தீவிரவாதிகள் பற்றி செய்தி சேகரிக்க சென்ற தேவிகா மர்மமான முறையில் இறந்து கிடக்கிறாள். அவளது மரணத்திற்கு தீவிரவாதிகள் தான் காரணமாக இருப்பார்கள் என்று நினைத்து, உண்மையை கண்டுபிடிக்க தீவிரவாதி கூட்டத்தில் தானும் ஒரு தீவிரவாதி என்று சொல்லி சேர்கிறான்.
உள்ளே சேர்ந்த அவன் உண்மையை கண்டு பிடித்து அதிரடிப்படை பெண் அதிகாரியின் மூலம் அவர்களை கைது செய்கிறான். அதிரடிப் படமாக உருவாகிறது “ அதிரடிப்படை “ படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.