.
.

.

Latest Update

புற்று நோயாளியின் ஆசையை நிறைவேற்றிய இளையராஜா


சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஆர்.எஸ். ரவிச்சந்திரன் வயது 44. தாய் தந்தை மறைந்து விட்ட நிலையில் உறவினர்கள் IMG_3228பராமரிப்பில் வளர்ந்து வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. தினக்கூலியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். புகைப்பழக்கம் உள்ள இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடர்ந்து இருமல் வந்ததால் மருத்துவரிடம் காட்டியிருக்கிறார்கள்.அங்கு அவரை பல கட்ட பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு புற்று நோய் முற்ற்ய நிலையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.ரவிச்சந்திரன் மரணத்தின் வாசலில் இருப்பதை அவரது உறவினர்களிடம் சொன்ன மருத்துவர்கள் அவர் ஆசைப்பட்டதை நிறைவேற்றி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது ரவிச்சந்திரனிடம் உறவினர்கள் அவரது ஆசையை கேட்க, தீவிர இளையராஜா ரசிகரான ரவிச்சந்திரன் ஒரே ஒரு முறை இளையராஜாவை சந்திக்க வேண்டும் என்று கூறிருக்கிறார். இந்த தகவல் இசைஞானி இளையராஜாவிடம் சொல்லப்பட, அவரும் உடனே IMG_3224வரச்சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.அதன்படி உறவினர்கள் அவரை இளையாராஜா இசையமைக்கும் பிரசாத் ஸ்டுடியோவிற்கு ரவிச்சந்திரனை அழைத்து வந்தனர்.அங்கு இளையராஜா ரவிச்சந்திரனுக்கு ஆறுதல் கூறி பாசத்தோடு விசாரித்தார்.அப்போது ரவிச்சந்திரன் “ஐயா எண்பதாம் ஆண்டிலிருந்து உங்களின் தீவிர ரசிகன் சோகம் சந்தோஷம் எதுவானாலும் எனக்கு உங்கள் பாட்டுதான். கவலை மறந்து இருப்பேன்யா” என்று கூற நெகிழ்ந்து போன இளையராஜா ரவிச்சந்திரனை முதுகில் தட்டிக்கொடுத்தார். அந்த நிமிடங்களில் ரவிச்சந்திரன் உட்பட அவரது குடும்பத்தினர் கண்கலங்கினார்கள். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்த இளையராஜாவின் கண்களும் கலங்கியிருந்தன.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles