.
.

.

Latest Update

புலனாய்வுத்துறை அதிகாரியாக நடிக்கும் அர்ஜுன்…


pizap.com14455778892021வைபவ், கருணாகரன், சோனம் பாஜ்வா நடிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவான “கப்பல்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பேஷன் ஃபில்ம் ஃபேக்டரி புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது.

பெயரிடப்படாத இப்புதிய படத்தினை பிரசன்னா, சிநேகா நடித்து வெளிவந்த “அச்சமுண்டு அச்சமுண்டு” வெற்றிப்படத்தையும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘பெருச்சாழி’ படத்தை இயக்கியவரும், பிரசன்னா லேகா வாஷிங்க்டன் நடித்த “கல்யாண சமையல் சாதம்” வெற்றி படத்தை தயாரித்தவருமான அருண் வைத்யநாதன் இப்படத்திற்கு கதை எழுதி இயக்குகிறார்.

Arjunஇதுவரை வெளிவந்த போலிஸ் கதையிலிருந்து மாறுபட்டு முதன்முறையாக புலனாய்வுதுறையினை மய்யமாக கொண்டு அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஒரு விறுவிறுப்பு மிக்க ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாகிறது இப்படம்.

புலனாய்வுதுறை அதிகாரியாக முதன்முறையாக இப்படத்தில் அர்ஜுன் நடிக்க, அவருடன் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், சுமன், சுஹாசினி மணிரத்னம், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்கின்றனர்.

பாலிவுட்டில் மட்டுமே சாத்தியம் என கூறப்படும் மல்டிஸ்டார் கதையம்சம் கொண்ட படத்தை அருண் வைத்யநாதனுடன் இணைந்து உருவாக்குகிறது பேஷன் ஃபில்ம் ஃபேக்டரி நிறுவனம்.

அருண் வைத்யநாதனுடன் இணைந்து திரைக்கதை மற்றும் வசனம் எழுதுகிறார் எழுத்தாளர் ஆனந்த ராகவ். ஒளிப்பதிவு அர்விந்த் கிருஷ்ணா, படத்தொகுப்பு சதீஷ் சூர்யா, இசைய நவீன்.

உமேஷ், ஜெயராம் மற்றும் சுதன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். கதை மற்றும் இயக்கம் அருண் வைத்யநாதன்.

தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கி தொடர்ந்து பெங்களூருவில் நடைபெறவுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles