எம்.ஆர்.தியேட்டர் – கிங்ஸ்டன் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ பெருமாள் கோயில் உண்டசோறு “ என்று பெயர் வைத்துள்ளனர்.
சந்தோஷ்குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோசிவா, டான்ஸ்ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் அத்தனை பேருமே புத்தம் புதுமுகங்கள்.
ஒளிப்பதிவு – டி.ஜே
இசை – ஆர்.ஆர்.கார்த்திக் – பாலபாரதி
எடிட்டிங் – ராஜ்கீர்த்தி
பாடல்கள் – டி.பேபிபாஸ்கர்
தயாரிப்பு மேற்பார்வை – முத்.அம்.சிவகுமார்
தயாரிப்பு – சந்தோஷ்குமார், ஜி.கே.பாபுஜி, ஜே.கிங்ஸ்டன்.
எழுதி இயக்குபவர் – V.T.ராஜா
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்……
படத்தில் மக்களுக்கு உபயோகமான ஒரு கருத்தைச் சொல்கிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் வீடு, பணம், கார், தோட்டம் என்று சேர்த்து வைக்கிற எதுவுமே உபயோகமில்லாததாகி விடும்.
அடுத்த தலைமுறைக்கு நாம் சேத்து வைக்க வேண்டியது சுற்றுச்சூழல், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு போன்றவை தான் சுற்றுச் சூழலலுக்கு முதல் எதிரி பிளாஸ்டிக் தான் இதை தான் இந்த படத்தின் மூலம் சொல்கிறோம். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பாலம் அமைப்பின் O.P.கல்யாணசுந்தரத்தை அழைத்தோம். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் பேராசிரியராக வேலை செய்த போது தனது சம்பளம் முழுவதையும் அப்படியே பாலம் அமைப்புக்கு அளித்தார். அவரது சேவையை பாராட்டி அமெரிக்கா 30கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியது. அதையும் அப்படியே அறக்கட்டளைக்கு கொடுத்து விட்டார்.
உயரிய இவரது சமூகசேவையை கௌரவிக்கும் பொருட்டு நடிகர் ரஜினிகாந்த் இவரை தனது அப்பாவாக தத்தெடுத்துக் கொண்டார்…அவருக்கு பணமும் விலை உயர்ந்த பொருட்களும் வழங்கினார் அதையும் அப்படியே பாலம் அமைப்பிற்கு வழங்கி விட்டார். அப்படிப் பட்ட நல்ல உள்ளத்தை அழைத்த போது உடனே ஒத்துக்கொண்டது பெருமையான விஷயம்.
இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் திரு. O.P. கல்யாணசுந்தரம் முன்னிலையில் இயக்குனர் பேரரசு இசைத்தட்டை வெளியிட இயக்குனர்கள் எஸ்.ரவிச்சந்திரன், ஜே.சுரேஷ் ஆகியோர் பெற்றுக்கொள்கிறார்கள்.