பெஸ்ட் ரிலீஸ் என்ற படநிறுவனம் சார்பில் டாக்டர். எஸ்.ஈ.பி.தம்பி மற்றும் எஸ்.மகேஷ் இருவரும் இனணந்து தயாரித்திருக்கும் படம் “ பள்ளிக்கூடம் போகாமலே” இந்த படத்தில் மலையாள நடிகர் அலெக்ஸின் மகன் தேஜஸ் அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். மற்றும் திலீபன் புகழேந்தி வில்லனாக நடிக்கிறார். மற்றும் கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீஹரி, ராஜ்கபூர், தேவதர்ஷினி, எ.வெங்கடேஷ், ஓ.ஏ.கே.சுந்தர், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – யு.கே.செந்தில்குமார்
இசை – சாம்சன் கோட்டூர்
பாடல்கள் – நா,முத்துக்குமார், விவேகா, பி.ஜெயசீலன்
கலை – சிவாயாதவ் / ஸ்டன்ட் – தளபதி தினேஷ்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ் / நடனம் – காதல் கந்தாஸ், ஹபீப், தருண்ராஜ்
தயாரிப்பு – டி.வி.சசி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பி.ஜெயசீலன்
படம் பற்றி இயக்குனர் ஜெயசீலன் கூறியது….
குழந்தைகள் தோல்வி பயத்தால் தற்கொலை முடிவு எடுக்க கூடாது என்பதுதான், இந்த படத்தின் கரு. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை படிப்பதற்காக அவர்களை துன்புறுத்த கூடாது. பள்ளிகளும் தங்களது பள்ளி மதிப்பெண்ணில் முதலிடம் எடுக்க வேண்டும் என்பதற்காக பிள்ளைகளை துன்புறுத்த கூடாது என்பதுதான் இந்த படத்தின் கதை.பெற்றோர்கள் தவறால் பிள்ளைகள் எப்படி திசை மாறுகிறார்கள் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ். இந்த படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா கடந்த ஆண்டு நடைபெற்ற + 2 பொது தேர்வில் 1200 / 1200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் இம்மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது என்றார் இயக்குனர் ஜெயசீலன்.